×

புதுச்சேரியில் ஜூன் 7 வரை ஊரடங்கு நீட்டிப்பு: துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் ஜூன் 7ம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார். கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்க 214 சுகாதார பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரியில் 18+ வயதினருக்கு செலுத்தும் தடுப்பூசி வாங்குவதற்கு ரூ.1.05 கோடிக்கு ஆளுநர் தமிழிசை செலவின ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியைச் செலுத்தும் முகாம்களை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தி தடுப்பூசி திருவிழாவும் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி முகாம்கள் நடைப்பெற்று வருகின்றன. மேலும், கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்களுக்கும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுமென்று ஆளுநர் தமிழிசை தெரிவித்திருந்தார்….

The post புதுச்சேரியில் ஜூன் 7 வரை ஊரடங்கு நீட்டிப்பு: துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Lieutenant Governor Tamilisai Soundararajan ,Deputy Governor ,Tamilisai Soundararajan ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை